பக்கத்து வீட்டிலிருந்து கேட்ட பெண்களின் அலறல் சத்தம். ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பெண்கள். மைத்துனர்களை வெட்டிச் சாய்த்த மருமகன். தடுக்க சென்ற மாமியாரை அரிவாளால் வெட்டி வெறி தீர்த்த பயங்கரம். மருமகனின் வெறிக்கு என்ன காரணம்? கொலையின் பின்னணி என்ன?எப்பவுமே ஆள் நடமாட்டம் அதிகமா இருக்குற நீலகிரி மாவட்டம், பந்தலூர் வாளவயலில உள்ள வீட்ல இருந்து ஒரு பெண்ணோட அலறல் சத்தம் கேட்டுருக்கு. பக்கத்து வீட்டுக்காரங்களும், ரோட்ல போறவங்களும் என்ன ஏதுன்னு அந்த வீட்டையே உத்து பாத்துட்டு இருக்கும்போது, கையில அரிவாளோட ஒருத்தன் வேக வேகமா வெளியே ஓடி வந்துருக்கான்.* உயிரிழந்து கிடந்த மேரி* சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணைஉடனே தகவல் தெரிஞ்சு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், சவுண்டு கேட்ட வீட்டுக்குள்ள போய் பாத்துருக்காங்க. அங்க, முகம், கை, கால்ன்னு உடம்புல எல்லா இடத்துலயும் வெட்டு பட்டு இறந்து கிடந்திருக்காங்க மேரி. பக்கத்துலேயே அவங்களோட மகன்கள் ரெண்டு பேரும், கிடந்துருக்காங்க. மேரி சடலத்த போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்ச போலீஸ், உயிருக்கு போராடிட்டு இருந்த இளைஞர்கள் 2 பேரையும் மீட்டு ட்ரீட்மெண்டுகாக ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சாங்க.* உயிருக்கு போராடி கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள்* மேரியின்சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸ் அதுக்கப்புறம், வீட்டுல என்ன நடந்துச்சு, மேரிய யாரு கொலை பன்னதுன்னு விசாரணைல இறங்குனாங்க. கொல்லப்பட்ட மேரியோட மகள் தேன்மொழிக்கும், அதே பகுதிய சேர்ந்த அசோக் என்பவனுக்கும் 6 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்திருக்கு. கல்யாணம் நடந்த கொஞ்ச நாள்லேயே கணவன் - மனைவிக்குள்ள மனஸ்தாபம் ஏற்பட்டுருக்கு. இந்த மனஸ்தாபம், போலீஸ் ஸ்டேஷனுக்கு போற அளவுக்கு அதிகமாகியிருக்கு. * 6 ஆண்டுகளுக்கு முன் நடந்த தேன்மொழி - அசோக் திருமணம்* திருமணமான சில நாட்களில் தம்பதிக்குள் மனஸ்தாபம்* போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற குடும்ப பிரச்சணைஇந்த மாதிரி பிரச்னைனால அசோக்கும், தேன்மொழியும் பிரிஞ்சு வாழ்ந்து வந்துருக்காங்க. இதுக்கு நடுவுல, விவாகரத்து கேட்டு மனைவி கோர்ட்ல கேஸ் கொடுத்திருக்குறதாவும் சொல்லப்படுது. என்ன தான் பிரச்னைன்னாலும், என்ன தான் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், கேஸ்னு பிரச்சினை போனாலும், மனைவி கூட சேந்து வாழனும்ங்குற எண்ணம், அசோக்குக்கு இருந்துருக்கு. மனைவிய சமாதானப்படுத்துறதுக்கு எடுத்த முயற்சி எல்லாம் தோல்விலயும் முடிஞ்சிருக்கு.* சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்த தேன்மொழி - அசோக் தம்பதி* விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிய மனைவி தேன்மொழி* மாமியார் மேரிக்கும், மருமகன் அசோக்கும் இடையே தகராறுமனைவி தேன்மொழிகிட்ட அசோக் பேச முயற்சிக்கும்போதெல்லாம் மாமியார் மேரிகூட அசோக்குக்கு தகராறு ஏற்பட்டுருக்கு. ஒருகட்டத்துல, தனக்கும், மனைவிக்கும் இடைல வரக்கூடிய எல்லா பிரச்சினைக்கும் மாமியார் மேரி தான் காரணம்னு அசோக்குக்கு தோணிருக்கு. மனைவிகூட சேந்து வாழ விடாம தடுக்குறதுல இருந்து தன்னோட வாழ்க்க இப்படி அந்தரத்துல தொங்குறதுக்கும் அவங்க தான் காரணம்னு நினைச்சு அவங்க மேல செம கோவம் வந்துருக்கு. அந்த கோவம் நாளாக நாளாக கொலைவெறியா மாறியிருக்கு.* பிரச்சினைக்கு மாமியார் தான் காரணம் என கருதிய அசோக்* மாமியார் மேரி மீது கடும் கோபத்தில் இருந்த மருமகன் அசோக்இந்த சூழல்ல, தேன்மொழி மனசு மாறி தன்னோட கணவன்கூட வாழ்றதுக்கு வந்துட்டாங்க. மனைவி வந்த ஒருவாரம் சைலண்ட்டா இருந்த அசோக் மதுபோதையில வீட்டுக்கு வந்து தேன்மொழிக்கிட்ட மறுபடியும் தகராறு பண்ண ஆரம்பிச்சிருக்கான். இந்த விஷயத்த தாய் மேரிக்கிட்ட சொல்லவே, அவங்க நியாயம் கேக்குறதுக்காக தன்னோட ரெண்டு மகன்களோட மகள் வீட்டுக்கு வந்துருக்காங்க. போதையில இருந்த அசோக் மாமியாருன்னு கூட பாக்காம அவங்கள தகாத வார்த்தைகளால பேசிருக்கான்.* கணவன் அசோக்குடன் வாழ சென்ற மனைவி தேன்மொழி* மது போதையில் மனைவி தேன்மொழியிடம் மீண்டும் தகராறு* மருமகனிடம் நியாயம் கேட்க சென்ற மாமியார் மேரிஅப்போ, மேரியோட மகன்கள் சுதாகரனும், அஜித்தும் சேந்து அசோக்க அடிக்க பாஞ்சிருக்காங்க. என் மேலயே கை வைக்கிறனு ஆத்திரமடைஞ்ச அசோக், ரெண்டு பேத்தையும் அரிவாளால வெட்டிருக்கான். அத பாத்ததும் பதட்டமான மேரி, மருமகன் அசோக்க தடுத்து நிறுத்திருக்காங்க. அப்ப, மாமியார்னு கூட பாக்காம அவங்கள அரிவாளால வெறித்தனமா வெட்டி சாச்சிருக்கான். மேரிக்கு, முகம், கை,கால்னு எல்லா இடத்துலயும் வெட்டுபட்டது. பெத்த தாய கணவன் வெட்டுனத பாத்து துடிதுடிச்சு போன தேன்மொழி கணவன தடுத்துருக்காங்க. ஆனா, அவங்கள தள்ளிவிட்டுட்டு மேரிய வெட்டிப்போட்டுட்டு அங்க இருந்து எஸ்கேப் ஆகிருக்கான் அசோக். * மைத்துனர்களை அரிவாளால் வெட்டிய அசோக்* தடுக்க சென்ற மாமியார் மேரியை வெட்டிய கொடூரம்* அசோக்கை கைது செய்த காவல்துறையினர்குற்றவாளி அசோக்கை வலைவீசி தேடிய போலீஸ், அவனோட செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ணிருக்காங்க. அதுல, அவனோட செல்போன் கடைசியா, கொலை நடந்த வீட்ல வச்சுதான் ஆன்ல இருந்துருக்கு. அதுக்கப்புறம்ம் ஃபோன் ஸ்விட்ச் ஆப்லயே தான் இருக்குது. தப்பி ஓடுன அசோக் கூடலூர்ல பதுங்கியிருந்த விஷயம் தெரிய வந்ததும், அங்க போன போலீஸ் அவன மடக்கி பிடிச்சு விசாரணை நடத்திட்டு இருக்காங்க. Related Link அடுத்தவரின் மனைவியுடன் இல்லீகல்