நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே குடித்து விட்டு அடித்து துன்புறுத்தியதாக தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர். அம்பேத்கர் நகரை சேர்ந்த பார்த்திபன் என்பவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மகன் முத்து செல்வத்தை அடித்து துன்புறுத்தியுள்ளார்.இதனால் ஆத்திரத்தில் தந்தையை மகன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.