கோவை மாவட்டம் அன்னூரில் சிறியசரக்கு வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் கட்டிடத் தொழிலாளி உயிரிழந்தார். மேட்டுப்பாளையம் சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கிய ரசூல் என்பவர் மீது, பின்னால் வந்த சிறிய சரக்கு வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் இருசக்கர வாகனத்துடன் தூக்கிவீசப்பட்ட ரசூல் படுகாயமடைந்து உயிரிழந்தார்.