அன்புமணி, அவரது மனைவி சௌமியா அன்புமணி தலைமையில், ஒரு கும்பல் அடிதடி, வன்முறை என அருவருக்கத்தக்க வகையில் செயல்படுவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், நாடாளுமன்ற உறுப்பினர், ராஜ்ய சபா உறுப்பினர், மத்திய அமைச்சர், கட்சி தலைவர் என எல்லா பதவிகளையும் அன்புமணிக்கு கொடுத்து, பெரிய தவறு செய்து விட்டதாக கூறினார். தனது கட்சிக்காரர்கள் மீது சுண்டுவிரல் பட்டாலும், அதற்கு அன்புமணியும், அவரது மனைவி சௌமியாவும் தான் காரணம் என்றும், பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், 21 பேரை சேர்த்து கொண்டு ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து கொள், அந்த கட்சிக்கு பெயர் வேண்டும் என்றால், நல்ல பொருத்தமான பெயரை நான் சொல்கிறேன், என்னோடும், பாமகவோடும் உனக்கு எந்த சம்மந்தமும் இல்லை, என்றும் கடுமையாக பேசினார். வரும் டிசம்பர் 30ஆம் தேதி, சேலம் மாவட்டம், தலைவாசலில் எங்களின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது, அதில் கருத்து கேட்கப்பட்டு, யாரோடு கூட்டணி அமைப்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது என்றும், பாமக தலைவர் ராமதாஸ் கூறி உள்ளார். இதையும் பாருங்கள் - "அன்புமணியை மந்திரியாக்கி பெரிய தப்பு பண்ணிட்டேன்" ராமதாஸ் பகீர் பேட்டி |RamadossSpeech | Anbumani