கடலூர் மாவட்டம், வடலூர் அருகே ஆபத்தானபுரத்தில் உள்ள பச்சைவாழி அம்மன் கோயிலை, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி, கிராம மக்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் கோயிலுக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இக்கோயிலை 20 ஆண்டுகளாக கிராம மக்கள் நிர்வாகம் செய்து வந்த நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் திடீரென கோயிலுக்குள் நுழைய முற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தியவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றினர்.இதை பாருங்கள்... வடலூர் அருகே கோயிலுக்குள் உள்ளிருப்பு போராட்டம்