திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே விவசாய நிலங்களில் ஒற்றை காட்டு யானை சுற்றித்திரிவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆயக்குடி பகுதியில் உள்ள விளைநிலங்களை சுற்றி சோலார் மின்வேலி அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதனையும் மீறி யானை ஒன்று சர்வ சாதாரணமாக பகல் நேரத்தில் நடந்து சென்றது.