வால்பாறை லோயர் பாரளை எஸ்டேட் பகுதியில் அந்தோணிசாமி என்பவருடைய நான்கு சக்கர வாகனம் காண்ட்ராக்டர் முறையில் இயங்கி வந்த நிலையில் தற்போது கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக அரசால் மக்களைத் தேடி மருத்துவம் என்ற பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்களை ஆங்காங்கே உள்ள மலைவாழ் மக்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இயங்கி வந்தத்துஅவசர ஊர்தியை உடைத்து நொறுக்கிய யானைஇந்த நிலையில் நேற்று இரவு 2 மணி அளவில் ஊருக்குள் உலா வந்த ஒற்றைக் காட்டு யானை அவசர உறுதியை தந்ததால் குத்தி கண்ணாடி வாகனத்தின் கதவு ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளது. இரவு நேரம் என்பதால் யாருக்கும் தெரியாத நிலையில் காலையில் வாகனத்தை பார்க்கும்போது யானை உடைத்துவிட்டது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள இருசக்கர வாகனங்களையும் தாக்கி உள்ளது. யானையை காட்டுக்குள் விரட்ட கோரிக்கைஇதனை கட்டுப்படுத்தும் வகையில் வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வன உயிரின மோதல் தடுப்பு காவலர்கள் யானையை கண்காணித்து அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என்றும், இரவு நேரங்களில் குடியிருப்பு மற்றும் சத்துணவுக்கூடம் கடைகளை உடைக்கும் நிலையில் உள்ளதால் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்ட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவசர ஊர்தி சேதமடைந்துள்ளதால் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Related Link விஜய் படம் ரிலீஸ் ஆக உதவினோம்