பழனி - கொடைக்கானல் சாலையில் இரவு நேரத்தில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால், மக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கோம்பைப்பட்டி முதல் ஆண்டிபட்டி வரை உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்து வந்தது. இந்நிலையில் கொடைக்கானல் செல்லும் பிரதான சாலையில், யானை சர்வ சாதாரணமாக உலா வந்தது. இது அங்குள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், இரவு நேரங்களில் கொடைக்கானல் செல்லும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.