சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டு, சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து, 81 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், குடும்ப நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க எண்ணியிருந்தோர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 26ஆம் தேதி முதல், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து, நாள்தோறும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 6ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 80,000 ரூபாயை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் தொடர்ந்து, தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று, செப்டம்பர் 9ஆம் தேதி செவ்வாய்கிழமை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து, மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் - ரூ.720 உயர்வுஒரு சவரன் - ரூ.81,200ஒரு கிராம் - ரூ.90 உயர்வு ஒரு கிராம் - ரூ. 10,150ஒரு கிராம் வெள்ளியின் விலை 140 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,40,000 ரூபாயாகவும் உள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை உயரவே வாய்ப்பு உள்ளது என்று வியாபாரிகள் கூறுவதால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையும் பாருங்கள்: BREAKING || சிகரத்தை நோக்கி… தங்கத்தின் விலை! | Gold News | Today Gold Rate | gold price