திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசுப்பேருந்தில் பயணித்த அரசுப்பள்ளி 7ஆம் வகுப்பு மாணவர், தான் இறங்க வேண்டிய இடத்தில் பேருந்து நிற்காமல் செல்கிறதே என எண்ணி பாதிவழியில் கீழே குதித்ததில் படுகாயமடைந்தார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் மாணவர் ஹரிஹரனை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.