திருவள்ளூரில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விடையூர் காரணி பகுதியை சேர்ந்த மார்ட்டின் லூயிவ் என்ற சிறுவன், திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில், தினந்தோறும் ரயில் மூலமாக பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து திருவள்ளூர் ரயில் நிலையத்தில் அதிக கூட்ட நெரிசலில் ரயிலில் ஏறிய சிறுவன் படியில் பயணித்ததால் ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது தவறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து தலையில் பலத்த காயமடைந்த சிறுவனை அங்கிருந்த பயணிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.