தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பிறந்தநாளுக்கு முந்தைய நாள் காவிரி ஆற்றில் மூழ்கி 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.மோட்டுபட்டியை சேர்ந்த பழனி என்பவரின் மகள் மேனிகா, கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் உறவினரின் ஈமச்சடங்கிற்காக, ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு சென்றார். ஆற்றில் குளித்த அந்த சிறுமி திடீரென இழுத்து செல்லப்பட்ட நிலையில், தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை சடலமாக மீட்டனர்.