தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, பள்ளியில் வழங்கப்பட்ட சத்து மாத்திரைகளை மொத்தமாக சாப்பிட்ட ஏழாம் வகுப்பு மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கன்னியபிள்ளைபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவன் விமல், தான் ஒல்லியாக இருப்பதாக கூறி, சக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாத்திரைகளை வாங்கி மொத்தமாக சேர்த்து சாப்பிட்டுள்ளார்.