தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து ஒப்பந்த தூய்மை பணியாளர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறியுள்ளது. இதனை சீர் செய்ய கழிவு நீர் உறிஞ்சி வாகனம் மூலம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்த தூய்மை பணியாளர் மணி, வருகை தந்து கழிவுநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது வாகனத்தின் பைப்பை பாதாள சாக்கடைக்குள் செலுத்தும் போது தவறி உள்ளே விழுந்த அவர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.