திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சமையல் எரிவாயு சிலிண்டரின் குழாயில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்ததில் கூரை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீப்பற்றியதும், வீட்டிற்குள் இருந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு வெளியே கொண்டு வந்த நிலையில், தீ மளமளவென பரவியது. தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீணை அணைத்தாலும் வீட்டில் இருந்த துணி மணிகள், பொருட்கள், புத்தகங்கள் என அனைத்தும் சாம்பலாயின.