திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே அந்தநல்லூர் காவிரி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் செயலிழக்க வைக்கப்பட்டது. கடந்த 30 ஆம் தேதி ராக்கெட் லாஞ்சர் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து வந்த போலீசார் சுமார் நான்கு கிலோ எடையுள்ள ராக்கெட் லாஞ்சரை வெடி குண்டு செயலிழப்பு நிபுணர்களை வரவழைத்து பாதுகாப்பான முறையில் செயலிழக்க வைத்தனர். இது அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்ட ராக்கேட் லாஞ்சர் என தகவல் தெரிவித்த போலீசார் காவிரி ஆற்றங்கரைக்கு வந்தது எப்படி என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.