திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி காரை வழிமறித்து 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சௌகார்பேட்டையில் உள்ள நகை தயாரிப்பு நிறுவன ஊழியர்களான குணவந்த், மகேஷ் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்தில் விற்பனையை முடித்துவிட்டு திரும்பியபோது, சமயபுரம் அருகே இருங்களூரில் கொள்ளை சம்பவம் நடந்தது. சந்தேகத்தின் பேரில் கார் ஓட்டுநரான பிரதீப்கானிடம் விசாரித்ததில் அவர் தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்ததையடுத்து அவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நகைகளை வைத்திருந்த மங்கிலால் தேவாசி, விக்ரம் ஜாட் ஆகியோரை மத்திய பிரதேசத்தில் கைது செய்து, 9 கிலோ 432 கிராம் நகை, 3 லட்சம் பணம், நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.