புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே, பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த சாலையை தனிநபர் ஆக்கிரமித்து பள்ளம் தோண்டியதால் அப்பகுதி மக்கள் சிரமத்தை சந்தித்துள்ளனர். பத்துத்தாக்கு என்ற இந்த கிராமத்தின் வழியாக தஞ்சாவூர், திருவோணம் வரை செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த நிலையில், கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த இந்த சாலையை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து பள்ளம் தோண்டியதாக தெரிகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அவசர தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுத்து இப் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.