மண் பானை மேல் ஏறி நின்று 10 நிமிடங்கள் 22 வினாடிகளில் 140 அம்புகளை எய்து சென்னையை சேர்ந்த 6 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார். சென்னை முகப்பேறு பகுதியை சேர்ந்த சிறுவன் நிதேஷுக்கு வில்வித்தையில் ஆர்வம் இருந்ததால் அர்ஜூனா வில்வித்தை அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு உலக இளம் சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அதன்படி, 10 நிமிடங்கள் 22 வினாடிகளில் 140 அம்புகளை எய்து சிறுவன் நிதேஷ் சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து சிறுவன் நிதேஷுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.