விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாததால் ஆத்திரம் அடைந்த கூலி தொழிலாளி, வீட்டின் முன்பு கால்வாயில் தேங்கியுள்ள கழிவுகளை அள்ளி சாலையில் வீசினார். மாதக்கணக்கில் கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பது, பொதுமக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.