செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே குண்டு குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தராததை கண்டித்து கிராம மக்கள், மாணவர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளபுத்தூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில், சுக்கன் கொள்ளை முதல் வெள்ளபுத்தூர் கிராமம் வரையிலான 2 கிலோ மீட்டர் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலையினை சீரமைத்து தரக்கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.