கொடைக்கானலில் வட்டக்கானல் முதல் கும்பக்கரை வரை 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோப் கார் அமைக்கும் திட்டத்துக்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாக, தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கொடைக்கானல் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், வட்டக்கானல் முதல் டால்பின் நோஸ் வரை ஆய்வு செய்தனர். சாத்திய கூறுகள் அடிப்படையில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பணிகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பிரையன்ட் பூங்கா, பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களை வட்டமாக சுற்றி வந்து பார்வையிடும் வகையில் ரோப் கார் அமைப்பது குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.