புதுக்கோட்டையில் தனியார் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. மரிய ஆண்டனி என்பவருடைய மனைவி அமல் லரோமியா மகன் மற்றும் மகளுடன் வசித்து வரும் நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உறவினர் வீட்டிற்கு சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.