புதுச்சேரி,மூலக்குளம், பிச்சவீரன் பேட் பகுதியில் இயங்கி வரும் கிறிஸ்ட் தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இதே கல்லூரி வளாகத்தில் கிரிஸ்ட் குழுமத்தின் பள்ளியும் செயல்பட்டு வருகிறது.அதன்படி கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கல்லூரி பேருந்து மூலம் வந்து செல்வது வழக்கம், இதனிடையே நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்களை கல்லூரி பேருந்தில் ஏற்றிக்கொண்டு புதுச்சேரி, பத்துகண்ணு, தொண்டமாநத்தம் வழியாக சென்றபோது, ஓட்டுநர் பேருந்தை கட்டுப்பாடு இல்லாமல், சாலையில் இடது மற்றும் வலது புறங்களுக்கு சென்றபடி தாறுமாறாக இயக்கியதைக் கண்ட வாகன ஓட்டிகள் பேருந்தை வழிமறித்த போது பேருந்து ஓட்டுனர் மது போதையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ஓட்டுநரிடம் மது போதையில் இருக்கிறாயா? எனக் கேட்டபோது அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் போதையின் உச்சத்தில் குழம்பியவாறு அவர் செய்த செயல்கள் அவர் போதையில் இருப்பதை உறுதி செய்தது, இந்நிலையில் இதனை அங்கு இருந்த நபர் வீடியோவாக பதிவு செய்து தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில்,இது போன்று மது அருந்திவிட்டு பள்ளி மாணவர்களை ஏற்றி செல்கிறோம் என்ற அச்சம் இல்லாமல் அவர்களது உயிரோடு விளையாடும் ஓட்டுநர்கள் மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது. Related Link 25 சவரன் தங்க நகையை வீட்டில் வைத்துக்கொண்டு நாடகம்