மதுரை வாடிப்பட்டி அருகே அதிவேகமாக இயக்கப்பட்ட தனியார் மினி பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மினி பேருந்துகளில் 25 பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும் என விதிமுறை உள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு கருப்பட்டி கிராமத்திலிருந்து வந்து கொண்டிருந்த பேருந்து பெருமாள்பட்டி அருகே விபத்தில் சிக்கியது. சாலையில் உருண்ட பேருந்து மூன்று முறை கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் 4 பேர் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.