திருச்சி மாவட்டம் முசிறி அருகே பைபாஸ் சாலையில் தனியார் பார்சல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஓட்டுநர் விரைந்து லாரியை நிறுத்திவிட்டு இறங்கியதால் காயமின்றி உயிர்தப்பினார்.