கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தனியார் பேருந்தும் சரக்கு ஏற்றி வந்த மினி ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பள்ளி மாணவன் உட்பட 3பேர் படுகாயமடைந்தனர்.கடுவனூர் வனப்பகுதியில் திருவண்ணாமலையிலிருந்து வந்த தனியார் பேருந்தும், சங்கராபுரத்திலிருந்து காய்கறி ஏற்றி வந்த மினி ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.அதில் பள்ளி மாணவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.