விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிறைச் சாலையில் இருந்து தண்டனை முடிந்து செல்போனுடன் வரும் கைதியின் இன்ஸ்ட்டா ரீல்ஸ் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் சிறைசாலையில் மத்திய சிறைத் துறை கண்காணிப்பாளர் அதிகாரிகளிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார். கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமன், திண்டிவனம் கிளைச் சிறைக்குச் சென்று அதிகாரிகள் மற்றும் சிறைக் காவலர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். இது குறித்து அவர், விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.