ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற கார் மீது மோதாமல் இருக்க முயன்ற டெம்போ வேன் மின் கம்பத்தின் மீது மோதியதில் மின் கம்பம் முறிந்து விழுந்ததில் காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். கோபியை சேர்ந்த தாமரைக்கனி ஓட்டி சென்ற காரில் 6 பேர் இருந்த நிலையில், கார் காசிபாளையம் நான்கு சாலை சந்திப்பில் சாலையை கடக்க முயன்றது. கார் திடீரென நிறுத்தப்பட்டதால் பின்னால் வந்த டெம்போ வேன் ஓட்டுநர் கார் மீது மோதாமல் இருக்க முயன்றபோது. வேன் சாலையின் நடுவே இருந்த மின் கோபுரத்தின் மீது மோதி பயங்கர சத்தத்துடன் முறிந்து விழுந்தது.