சென்னையில், ஆபரண தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் 12 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், ஒரு சவரன் 99 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளியின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெள்ளியின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.ஒரு கிராம் வெள்ளியின் விலை 5 ரூபாய் அதிகரித்து 226 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 2 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.