ரசிகர்களை புறம் தள்ளும் தமிழக வெற்றி கழக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கண்டித்து வேலூரில் வரும் 12 ஆம் தேதி போஸ்டர் ஒட்டப்படும் என, சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பழைய பதிவினை வேலூரை சேர்ந்த விஜய் மணிகண்டன் என்பவர் மீண்டும் பரப்பி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் வெளியிட்டுள்ள பதிவிற்கு சிலர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.