கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த முள்ளம்பன்றி, 3 மணி நேர போராட்டத்துக்கு பின் பிடிபட்டது.சுகாதார நிலைய வளாகத்தில் புதர், செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில், ஊராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது முள்ளம்பன்றி ஒன்று தென்படவே, அங்கிருந்த நோயாளிகளும், பொதுமக்களும் ஓட்டம் பிடித்தனர்.தகவலறிந்து வந்த வனத்துறையினர் முள்ளம்பன்றியை பிடிக்க முயன்ற நிலையில், அது அங்கிருந்து தப்பி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.இதையடுத்து சுமார் 3 மணி நேரம் போராடி முள்ளம்பன்றியை பிடித்த வனத்துறையினர், ஆழியார் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.