சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செக்கானூர் பகுதியைச் சேர்ந்த வீரமுத்து என்பவர் கொங்கணபுரம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவர் மே மாதம் பணி ஓய்வு பெறவுள்ள நிலையில், காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது மயக்கம் வருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காரின் மூலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.