திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் இரவு நேரத்தில் விஷப்பாம்பு புகுந்ததால் தாய்மார்கள் பதறித் துடித்தனர். பாம்பு நடமாட்டம் குறித்து தகவல் தெரிவித்தால் அதை கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மருத்துவமனை நிர்வாகம் எடுப்பதில்லை என மகப்பேறு தாய்மார்கள் குற்றம் சாட்டினர்.