தமிழக மக்களுக்காக கொண்டு வரும் திட்டத்தில், யார் பெயர் என்பது முக்கியமா? அல்லது திட்டத்தில் மக்கள் பயன்பெறுவது முக்கியமா? என அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், முதலமைச்சர் படம் இருப்பது குறித்து அரசியல் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அதிமுக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.