கரூர் மாவட்டம் மண்மங்கலத்தை அடுத்த கடம்பன்குறிச்சி பகுதியில் காவிரி ஆற்றில் மூழ்கி மாடும், அதனை காப்பாற்ற சென்றவரும் நீரில் மூழ்கி பலியாகினர். ஆயுத பூஜைக்காக தர்மலிங்கம் என்பவர் தனது இரட்டை மாட்டு வண்டியை சுத்தம் செய்ய காவிரி ஆற்றில் இறங்கியபோது மாடு தண்ணீரில் மூழ்கியுள்ளது. அதனை காப்பாற்ற முயன்ற பழனியப்பன் என்பவரும் நீரில் அடித்து செல்லப்பட்டார்.