திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், இரண்டு பேர் காயமடைந்தனர். மதுரை மாவட்டம் கீழ கள்ளந்திரியைச் சேர்ந்தவ தேவராஜ் என்பவர் திண்டுக்கலில் உள்ள தனது உறவினரை சந்திப்பதற்காக வாடகை காரில் பயணித்தார். தேசிய நெடுஞ்சாலையில் நத்தம் வழியாக பள்ளப்பட்டி பிரிவு அருகே உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த மின் கம்பத்தில் படுபயங்கரமாக மோதியது.