கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கால் வலி என சிகிச்சைக்கு சென்றவருக்கு, தவறான சிகிச்சையால் கால் அகற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. வெங்கடேஷ் நகரில் செயல்பட்டு வரும் ஆயுஷ் என்ற மருத்துவமனையில், பரேக்கல் என்பவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால், அவருக்கு கால் வீக்கம் ஏற்பட்டு அழுகியது.