காரைக்கால் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் கிளினிக்கில் கடந்த ஆண்டு மூன்று லட்சம் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்த நிலையில் பணத்தை திருடிய சிசிடிவி காட்சி வெளியாகியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவர் வனிதா என்பவர் நடத்தி வந்த தனியார் கிளினிக் கதவை உடைத்து மருத்துவர் அறையில் இருந்த மூன்று லட்சம் பணத்தை முகமூடி அணிந்து வந்த மர்மநபர் திருடியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.