தென்காசி மாவட்டம் கடையம் அருகே மூன்று சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கடையத்தை அடுத்துள்ள முதலியார்பட்டி பகுதியை சேர்ந்த செய்யது பாசில், பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி செல்லும் வேன் ஓட்டுநராக உள்ளார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மூன்று சிறார்கள் டியூசன் முடிந்து வீடு திரும்பியபோது, செய்யது பாசில் அவர்களை வழிமறித்து பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறார்களின் பெற்றோர் அளித்த புகாரில் போலீசார் செய்யது பாசிலை கைது செய்தனர்.