திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வனச்சரகத்திற்குட்பட்ட காப்பு காடு பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ஒருவரை கைது செய்த வனத்துறையினர் அவரிடமிருந்து 3 நாட்டு துப்பாக்கிகள், நாட்டு வெடி குண்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் பலாம்பட்டு பகுதியை சேர்ந்த வெள்ளையன் என்பதும், தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடியதும் தெரிய வந்தது. அவருடன் வனவிலங்குகளை வேட்டையாட சென்ற இருவர் தப்பி ஓடியதாக கூறிய நிலையில், அவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.