தொழில்களில் முதலீடு செய்வதாக பணத்தை பெற்று பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்திய நபர் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி என்.ஐ.ஏ.வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னையை சேர்ந்த சாந்திகுமாரி, தாக்கல் செய்த மனுவில், செங்குன்றத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவர் சர்வதேச அளவில் தொழில்களில் முதலீடு செய்வதாக கூறி, பலரிடம் பணத்தை பெற்று சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக தெரிவித்தார்.