மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்துவிட்டு 8 ஆண்டுகளாக குடும்பத்துடன் தலைமறைவான நபரின் தாயார், பொங்கல் பரிசுத்தொகை மூவாயிரம் ரூபாயை பெற ரேசன் கடை வந்தபோது கையும் களவுமாக பிடிபட்டார். இரும்பாடியை சேர்ந்த ஜீவானந்தம் சுந்தரபாண்டியன் அண்ட் கோ என்ற பெயரில் அடகு கடை மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். நிதி நெருக்கடியால் பணம் மற்றும் நகையுடன் குடும்பத்துடன் ஜீவானந்தம் தலைமறைவான நிலையில், பணத்தை பறிகொடுத்த மக்கள் போலீசில் புகாரளித்தனர்.இதையும் படியுங்கள் : ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் அஷ்டமி சப்பர வீதிவுலா