தென்காசி மாவட்டம் புளியங்குடியில் போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த நபர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். டாஸ்மாக் ஊழியராக இருந்த காட்டு ராஜா, போக்சோ வழக்கில் கைதானதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த காட்டு ராஜா, போக்சோ வழக்கு மற்றும் பணியிடை நீக்கம் போன்ற காரணங்களால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.