நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கிணறு வேலைக்காக, வெடிமருந்துகளை பையில் எடுத்த சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். வாழவயல் பகுதியில் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வரதராஜ் என்பவரின் பையில் வெடிமருந்துக்கு பயன்படுத்தும் 24 டெட்டனேட்டர்கள் மற்றும் 6 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.