திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் தலைநசுங்கி உயிரிழந்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காமராஜர் துறைமுகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்த வல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு என்பவர் பணி முடிந்து அத்திப்பட்டு புதுநகர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பிரபு தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.