திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகளிடம் மருத்துவமனை ஊழியர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் உள்ள ஆறாவது வார்டில் காலில் ஏற்பட்ட காயத்திற்கு கட்டு போட வந்த நபரிடம், அங்கு பணியில் இருந்த புஷ்பா என்பவர் கட்டு போட்டு விட்ட பிறகு, அந்த நோயாளியிடம் இருந்து லஞ்சமாக பணத்தை பெற்றுள்ளார்.