மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருக்கருகாவூரில் உள்ள கீற்றுக்கொட்டகை பயணிகள் நிழற்குடைக்கு பதிலாக கான்கிரிட் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதே போல் பழுதடைந்துள்ள ரேஷன் கடை மற்றும் விஏஓ அலுவலகத்தையும் சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.