விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடியின் காலுக்கு திமுக நிர்வாகி ஒருவர் காலணி அணிந்து விட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இரத்ததானம் முகாமிற்கு வருகை தந்த அமைச்சர், படிக்கட்டில் ஏறியபோது அவரது காலில் இருந்து காலணி கழன்றது. இதையறிந்த திமுக முன்னாள் மாவட்ட துணைச் செயலாளரான அசோகன், குனிந்து அமைச்சருக்கு காலணி அணிந்து விட்டார்.