திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் ஒரு நாள் கோடை விழாவை அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். முன்னதாக மயிலாட்டம் கோலாட்டம் என மேள தாளங்கள் முழங்க அமைச்சர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோடை விழாவில் மலர் கண்காட்சி, பழ கண்காட்சி இடம் பெற்றுள்ள நிலையில், மகளிர் சுய உதவி குழுக்கள், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்க உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.